செங்கை அரசு மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பணி தீவிரம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 2012ம் ஆண்டு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கப்பட்டது. இங்கு, விபத்து உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்காக, ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது.எம்.ஆர்.ஐ., ஸ்கேன் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியதால், புதிய எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வழங்க மருத்துவக்கல்லுாரி இயக்குனரகத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் கருத்துரு அனுப்பி வைத்தது.அதன்பின், மருத்துவமனைக்கு புதிதாக 12 கோடி ரூபாய் மதிப்பில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு, மருத்துவக்கல்லுாரி இயக்குனரகம் உத்தரவிட்டது.தற்போது, மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதியில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்தவுடன், இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும் என, பொறியாளர்கள் தெரிவித்தனர். கட்டணம்
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு வேதாசலம் நகரில் உள்ள ஆரியா ஸ்கேன் மையத்தில், எம்.ஆர்.ஐ., ஸ்கேன், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.