மேலும் செய்திகள்
எரியாத மின் விளக்கு வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
15-Jun-2025
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் மேம்பாலத்தில், எதிர் திசையில் செல்லும் மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணிக்கின்றனர்.செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் நகரமாக, சிங்கபெருமாள் கோவில் உள்ளது.இங்கு, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர்.இந்த பகுதியில் அடிக்கடி ரயில்வே 'கேட்' மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதையடுத்து, இங்கு ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டு, சமீபத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் திறந்து விடப்பட்டது.இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் எதிர் திசையில், மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:கொண்டமங்கலம் ஏரியில் இருந்து மண் எடுத்து வரும் லாரிகள், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் மண்டபத் தெரு வழியாக ஜி.எஸ்.டி., சாலை வந்து, மேம்பாலத்தில் எதிர் திசையில் செல்கின்றன.அனுமந்தபுரம் சாலை, திருத்தேரி சந்திப்புகளில் கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால், 3 கி.மீ., துாரம் மகேந்திரா சிட்டி சென்று திரும்பி வரும் நிலை உள்ளது. இதனால், டாரஸ் லாரி ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் எதிர் திசையில் வேண்டுமென்றே ஆபத்தை விளைவிக்கும் வகையில் செல்கின்றனர். இதுபோன்று விதிமீறல்களில் ஈடுபடும் டாரஸ் லாரிகளால், சரியான திசையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர், அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
15-Jun-2025