உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மல்சிங் ஷீட் பொருத்தும் கருவி விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

மல்சிங் ஷீட் பொருத்தும் கருவி விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், 10,000 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில், புன்செய் நிலப்பரப்பில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு வருகிறது.கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் தர்ப்பூசணி, கிர்ணி பழ வகைகளை பயிரிடுவதில், விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.அச்சிறுபாக்கம் அருகே அல்லுார் கிராமத்தில், தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு, மேட்டுப்பாத்தி கட்டுதல், சொட்டுநீர் குழாய் அமைத்தல் மற்றும் மண்ணின் நீர் பதத்தை பாதுகாக்கும் 'மல்சிங் ஷீட்' பொருத்துதல் ஆகிய மூன்று பணிகளையும் ஒருங்கிணைத்து, இயந்திரம் மூலம் செயல்படுத்துவது பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்நிகழ்வில், வேளாண் பொறியியல் துறை முதன்மை பொறியாளர் முருகேசன், மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் மோகன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.இதன் மூலம், வேலை ஆட்கள் பயன்பாடு குறைக்கப்படுகிறது. குறைந்த செலவில் கிடைக்கும் இயந்திரத்தால், உரிய நேரத்தில் செய்வதன் மூலம், மிகவும் பயனுள்ளதாக அமையும் என, பங்கேற்ற விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை