மேலும் செய்திகள்
அடுக்கு மாடி குடியிருப்புக்கு வீட்டு வரி
20-Aug-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தசரா பண்டிகை விழாவையொட்டி விளையாட்டு சாதனங்கள், கடைகள் நடத்துவதற்கு, 23 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட, நகர மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செங்கல்பட்டில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை விழா, 10 நாட்கள் நடைபெறும். செங்கல்பட்டு அண்ணா சாலை, மேட்டுத்தெரு, நத்தம், அனுமந்தபுத்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தினமும் அம்மன் மலர் அலங்காரம் செய்து வைப்பர். இதைக் காண மாவட்டம் முழுதும் இருந்து, ஏராளாமானோர் வந்து செல்வது வழக்கம். மக்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டு சாதனங்கள், சிறிய மற்றும் பெரிய ராட்டிணங்கள் மற்றும் கடைகள் வைக்கப்படும். இவற்றுக்கான குத்தகை உரிமம் ஆண்டுதோறும் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி வாயிலாக குத்தகை விடப்படுகிறது. குத்தகை தொகை அடிப்படையில் உரிமம் வழங்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த 2024 - 25ம் ஆண்டு, 21.86 லட்சம் ரூபாய்க்கு குத்தகை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2025 - 26, 2027 - 28 வரை மூன்று ஆண்டுகளுக்கு, தசரா பண்டிகை கொண்டாடும் நாட்களுக்கு, விளையாட்டு சாதனங்கள் சிறு, பெரு ராட்டிணங்கள் மற்றும் வணிக கடைகளில் கட்டண தொகை வசூலிப்பதற்கு ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி வாயிலாக குத்தகை விட, நகரமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், 2024 - 25ம் ஆண்டு குத்தகை தொகையான 21.86 லட்சம் ரூபாயிலிருந்து, 23 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்து, நகர மன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
20-Aug-2025