உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிணற்றில் மூழ்கி நாகை மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி நாகை மாணவர் பலி

கூவத்துார் நாகப்பட்டினம் மாவட்டம், வெள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரூபக்குமார் என்பவரது மகன் நிதீஷ்குமார், 20. இவர், கூவத்துார், சீக்கினாகுப்பத்தில் செயல்படும் மிடாஸ் கல்லுாரியில், ஆர்க்கிடெக் இரண்டாம் ஆண்டு படித்தார்.நேற்று பிற்பகல் 3:00 மணியளவில், கல்லுாரி நண்பர்களான திண்டிவனத்தைச் சேர்ந்த மதன்குமார், 24, ராணிப்பேட்டை சிப்காட் பகுதியைச் சேர்ந்த இனியன், 24, ஆகியோருடன், கொடூர் கிராமம் ஆச்சிவிளாகம் வயல்வெளி பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.அப்போது, எதிர்பாராதவிதமாக படியில் கால் வழுக்கி விழுந்துள்ளார். இதில், தலை மோதி பலத்த காயத்துடன் கிணற்றில் விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிய அவரை, நண்பர்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. உடனே, கூவத்துார் போலீசார் மற்றும் செய்யூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், அரை மணி நேர தேடுதலுக்குப் பின், நிதீஷ்குமார் உடலை மீட்டனர்.போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அவரது நண்பர்களிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை