மேலும் செய்திகள்
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க அழைப்பு
01-Feb-2025
திருப்போரூர்,:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில், 'மனித உரிமைகளை முன்னேற்றுதல், சம கால பிரச்னைகள் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெய கவுரி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீமன்ற முன்னாள் நீதிபதி விமலா பங்கேற்றார். கருத்தரங்கில் அதிகாரிகள், 500க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பங்கேற்றனர். 45 மாணவ, மாணவியர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். அதில் ஒன்பது சட்ட ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
01-Feb-2025