உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நென்மேலி ஸ்ரீகோகுலம் பள்ளி ஆண்டு விழா

நென்மேலி ஸ்ரீகோகுலம் பள்ளி ஆண்டு விழா

செங்கல்பட்டு, செங்கல்பட்டு, நென்மேலி பகுதியில் உள்ள, ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளியில், 13ம் ஆண்டு விழா, பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பிரவின் முன்னிலை வகித்தார்.துணைத்தலைவர் லிஜிஷா பிரவின் வரவேற்றார். முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்று, 2023- 24ம் கல்வியாண்டில் கல்வி, விளையாட்டு மற்றும் பள்ளியில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு, சான்றிதழ், பதக்கம் வழங்கி பேசியதாவது:குழந்தைகளுடன் தினமும், பெற்றோர்கள் குறைந்தபட்சம் ஒருமணி நேரமாவது செலவிட வேண்டும். பெற்றோர்களின் கண்காணிப்பில் இல்லாத குழந்தைகள் போதைப்பழக்கம் போன்ற தீய வழியில் செல்லக்கூடும். இந்த குழந்தைகளை பள்ளி நிர்வாகம், குழந்தைகள் உறவினர்கள் கண்காணிக்க வேண்டும். இந்தியாவின் வருங்காலத் துாண்களாக விளங்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலம், ஆசிரியர்கள் கையில் மட்டுமல்லாமல் பெற்றோர்களின் கையிலும் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பள்ளி முதல்வர் டாக்டர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !