மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறித்தோருக்கு வலை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மேலமையூரில், கடையில் புகுந்து மூதாட்டியிடம் 5 சவரன் தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி, 60. இவர், தன் வீட்டிலேயே சிறிய மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் பார்வதி கடையில் இருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், குளிர்பானம் வேண்டுமென கேட்டுள்ளனர். பார்வதி குளிர்பானம் எடுக்க திரும்பிய போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.