மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து கவிழ்ந்து ஓட்டுநர் படுகாயம்
08-Oct-2024
செங்கல்பட்டு, அக். 15--செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் கிராமத்தை சேர்ந்தவர் பிரமோத், 20. வேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று காலை, வழக்கம் போல பிரமோத் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வந்த போது, மூன்று நபர்கள் பிரமோத்தை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.சக நண்பர்கள் பிமோத்தை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், பிரமோத், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் ஒழலுார் கிராமத்தில் பேனர் வைப்பது தொடர்பாக, பிரமோத் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சச்சின், 20, கவுதம், 20, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாகவே, மூவரும் இணைந்து, பிரமோத்தை தாக்கியது தெரியவந்தது. தப்பிச் சென்ற மூவரையும், போலீசார் தேடி வருகின்றனர்.
08-Oct-2024