உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதுடில்லி குண்டுவெடிப்பு கல்பாக்கத்தில் கண்காணிப்பு

புதுடில்லி குண்டுவெடிப்பு கல்பாக்கத்தில் கண்காணிப்பு

கல்பாக்கம்: புதுடில்லியில் காரில் வெடிகுண்டு வெடித்து, பலர் இறந்த பயங்கரவாத சம்பவம், நேற்று முன்தினம் நடந்தது. எனவே, நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து, அணுசக்தி தொழிற்பகுதி கல்பாக்கத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்டவை இயங்கும் அணுசக்தி தொழில் வளாக நுழைவாயிலில் சி.ஐ.எஸ்.எப்., படையினர், பணிக்கு வந்த அணுசக்தி துறையினர், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் அடையாள அட்டையை பரிசோதித்து, வெடிகுண்டு போன்ற அபாய பொருட்கள் உள்ளனவா என பரிசோதித்து வளாகத்திற்குள் அனுமதித்தனர். ஊழியர்களுக்கான பேருந்து, பிற வாகனங்களும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அணுசக்தி துறையினர் வசிக்கும் கல்பாக்கம், அணுபுரம் ஆகிய நகரிய பகுதிகளிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ