உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துாரில் புது ஸ்கூட்டர் திருட்டு

மேல்மருவத்துாரில் புது ஸ்கூட்டர் திருட்டு

மேல்மருவத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், கேசவராயன்பேட்டை, லட்சுமி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில், இரண்டாவது தளத்தில் வசித்து வருபவர் ஜெகநாதன், 36.இவர், கடந்த சில நாட்களுக்கு முன், புதிதாக 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டர் வாங்கியுள்ளார்.கடந்த 25ம் தேதி, வீட்டின் தரைதளத்தில் உள்ள 'பார்க்கிங்'கில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார்.பின், மீண்டும் வந்து பார்த்த போது, வாகனம் திருடு போனது தெரிந்தது.இது குறித்து மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ