செய்தி எதிரொலி சாலையில்இரும்பு தடுப்புகள் அமைப்பு
செய்தி எதிரொலி சாலையில்இரும்பு தடுப்புகள் அமைப்பு சிங்கபெருமாள் கோவில்,சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலையில், ஆப்பூர் கடவுப்பாதையில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.இது குறித்து நமது நாளிதழில் கடந்த 7ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து,பாலுார் போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து இந்த பகுதியில் இரண்டு மார்க்கத்திலும் இரும்பு தடுப்புகளை அமைத்து உள்ளனர்.