உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் யாரும் வரவில்லை

உங்களுடன் ஸ்டாலின் யாரும் வரவில்லை

கோவிலம்பாக்கம்: பொது மக்கள் அன்றாடம் அணுகும் துறைகளின் சேவைகளை, அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் நோக்கமாகும். தமிழகம் முழுதும், மாவட்டவாரியாக இந்த முகாம்கள் நடந்து வருகின்றன. பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலம்பாக்கம், சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமில், பொது மக்கள் யாரும் வராததால், இருக்கைகள் காலியாக கிடந்தன. தன்னார்வலர்கள் மட்டும் இருக்கைகளில் அமர்ந்து, அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து ஒருவர் கூறியதாவது: இன்று முகாம் நடைபெறும் என, பொது மக்களுக்கு முறையாக அறிவிக்கவில்லை. 'வாட்ஸாப்' குழுவில் வந்த தகவலால் தான், முகாம் நடப்பதே தெரிந்தது. கோவிலம்பாக்கம் ஊராட்சியின் சில பகுதிகள், மடிப்பாக்கம் கிராமத்தின் கீழ் வருவதால், அப்பகுதியில் வாழ்வோரின் மனுக்களை இணையதளத்தில் பதிவு செய்ய இயலாததால், பலர் முகாமில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து ஊராட்சி செயலர் கூறும்போது, 'முகாம் குறித்து, ஒரு வாரமாக அறிவிப்பு வெளியிட்டு வருகிறோம். இதற்கு முன் நடந்த இரண்டு முகாம்களில், 80 சதவீதம் பேர் பங்கேற்றனர். அதனால், இதில் பங்கேற்கவில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை