உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வடமாநில தொழிலாளி லாரி மோதி பலி

 வடமாநில தொழிலாளி லாரி மோதி பலி

திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே லாரி மோதி, வடமாநில கூலி தொழிலாளி பலியானார். பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் பஜன் சவுத்ரி, 32. இவர், கேளம்பாக்கம் அருகே சிறுசேரியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, நாவலுார் - தாழம்பூர் சாலையில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த லாரி, ராம் பஜன் சவுத்ரி மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ராம் பஜன் சவுத்ரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த நபரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ