உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொங்கல் பரிசு டோக்கன் புகாருக்கு எண்கள் அறிவிப்பு

பொங்கல் பரிசு டோக்கன் புகாருக்கு எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான,'டோக்கன்' வினியோகம் துவங்கி உள்ளது.கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாவில், தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 4.36 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய தொகுப்பினை வழங்க உத்தரவிட்டுள்ளது.இதை வினியோகிக்க, ரேஷன் கார்டு உள்ளவர்கள் வீடுகளுக்கு, டோக்கன் வழங்கும் பணி, கடந்த 2ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடக்கிறது. காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வினியோகம் செய்யப்படுகிறது. இப்பணியில், 500க்கும் மேற்பட்ட ரேஷன் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரேஷன் கடை விற்பனை முனைய இயந்திரத்தின் 'பயோ மெட்ரிக்' முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார் இருப்பின், கலெக்டர் கட்டுப்பாட்டு அறை எண்; 044-27427412- 27427414 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், துணைப் பதிவாளர் 95667 56387, வட்ட வழங்கல் அலுவலர்கள்; செங்கல்பட்டு 99411 83641, மதுராந்தகம் 73976 30313, திருக்கழுக்குன்றம் 98659 84506, வண்டலுார் 96297 49023, செய்யூர் 97882 64833 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை