உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சத்துணவு பணியிடம் விண்ணப்பிக்கலாம்

சத்துணவு பணியிடம் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில், பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம், மாவட்ட அளவில் சத்துணவு திட்ட செயலாக்க அலுவலக உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் 8,000 ரூபாய். கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி.தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் தலா ஒரு பணியிடங்களுக்கு 15,000 ரூபாய் தொகுப்பூதியம். கல்வி மற்றும் இதர தகுதிகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கணினியில் எம்.எஸ்.ஆபீஸ் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது. இப்பணியிடங்களுக்கு வரும் 18ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை, கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி