உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூவத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்து பாதிப்பால் அவஸ்தை

கூவத்துாரில் ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்து பாதிப்பால் அவஸ்தை

கூவத்துார் : கூவத்துாரில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், ஆடை, நகை உள்ளிட்ட கடைகள் உள்ளன. கூவத்துார், கடலுார், முகையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு, பிரதான வர்த்தக இடமாக விளங்குகிறது.இங்குள்ள பஜார் சாலை மற்றும் மதுராந்தகம் சாலை ஆகிய இடங்களில், அதிக கடைகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன் சிறியதாக இருந்த பெரும்பாலான கடைகள், தற்போது பெரிய கட்டடங்களாக மாறியுள்ளன. கடைகள் சாலை பகுதி வரை ஆக்கிரமித்து, சாலைகள் மிகவும் குறுகியுள்ளன.கடைகள், பள்ளிகள், வங்கி, ஆரம்ப சுகாதார மையம், தனியார் மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு, அரசு பேருந்து, ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றில், ஏராளமானோர் வருகின்றனர்.பிற பகுதியினர், கல்பாக்கம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, இப்பகுதி வழியே செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில், சாலைகளில் வாகனங்கள் கடக்க இயலாமல் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப் படுகிறது.கடைகளுக்கு வரும் இருசக்கர வாகனங்கள், கடைகளுக்கு சரக்குகள் ஏற்றிவரும் வாகனங்கள், கடைகளின் முன் சாலையில் நீண்டநேரம் நிறுத்தப்படுகின்றன. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இது ஒருபுறமிருக்க, ஷேர் ஆட்டோக்காரர்கள், புதுச்சேரி சாலை சந்திப்பு, பஜார் சாலையில், மதுராந்தகம் சாலை சந்திப்பு பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து, வரிசையாக ஆட்டோக்களை நிறுத்துகின்றனர்.பஜார் சாலை வழியே, நீண்டகாலமாக சென்ற அரசு, தனியார் பேருந்துகள், சில ஆண்டுகளாக வேறு வழியாக செல்கின்றன. பயணியரை, ஷேர் ஆட்டோவில் ஏற்றிச் செல்வதற்காக, பேருந்துகளை வேறு பாதையில் அடாவடியாக திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது.எனவே, போக்குவரத்து பாதிப்பு கருதி, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ