மேலும் செய்திகள்
மகா கணபதி கோவில் விழா விளையாட்டு போட்டிகள்
29-Aug-2025
திருப்போரூர்:தண்டலம் ஓம் ஸ்ரீ மகா கணபதி கோவிலில் நேற்று, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. திருப்போரூர் அடுத்த தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ஓம் மகா கணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நேற்று இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு, முதல் கால பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 7:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும் நடந்தன. அதைத் தொடர்ந்து காலை 7:30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மகா கணபதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
29-Aug-2025