குட்கா பறிமுதல் ஒருவர் கைது
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம் அருகே நெரும்பூர் பகுதிகளில் உள்ள கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.அப்போது, நெரும்பூர் கிராமத்தை சேர்ந்த தோமு, 43, என்பவருக்குச் சொந்தமான மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 105 கிராம் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்த திருக்கழுக்குன்றம் போலீசார், தோமுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.