ஸ்கூட்டரில் கார் மோதி படப்பையில் ஒருவர் பலி
படப்பை:படப்பை, ஆதனஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன், 46. ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை ஊழியர். 'டி.வி.எஸ்., என்டார்க்' ஸ்கூட்டரில் நேற்று, பிரியாணி வாங்க சென்று கொண்டிருந்தார்.வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை, படப்பை அருகே, ஆரம்பாக்கம் கூட்டுசாலை சந்திப்பை கடந்தபோது, அந்த வழியே சென்ற 'இன்னோவா' கார், ஸ்கூட்டர் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த மகேந்திரன், அதே இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து, தாம்பரம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்