மாமல்லபுரம் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப வகுப்பறை கட்டடமின்றி அவதிப்பட்டனர்.பெற்றோர், ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, அரசிடம் வலியுறுத்தினர்.இதையடுத்து மாவட்ட நிர்வாகம், கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்திடம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட பரிந்துரைத்தது.இதையடுத்து நிலைய நிர்வாகமும், 1.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.கடந்த ஜனவரியில் பணி துவங்கி, தற்போது தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என, தலா இரண்டு வகுப்பறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் மேஜைகள், இருக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன. நேற்று நடந்த துவக்க விழாவில், நிலைய இயக்குனர் சேஷையா, புதிய கட்டடத்தை திறந்தார்.