செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, நேற்று உபரி நீர் திறக்கப்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள பகுதிகளுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள காயிதே மில்லத் நகர், சீனிவாசபுரம் பகுதிகளில் தண்ணீர் வருவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.தொடர்ந்து, 500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, அணுகு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பெருங்களத்துாரில், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியான அன்னை அஞ்சுகம் நகரில் வசிக்கும் 90 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, தாம்பரம் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.