உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வள்ளுவர் கோட்டம் மார்ச்சில் திறப்பு?

வள்ளுவர் கோட்டம் மார்ச்சில் திறப்பு?

சென்னை : சென்னை, நுங்கம்பாக் கத்தில் உள்ள வள்ளுவர்கோட்டம், பொழுதுபோக்கு மையமாக உள்ளது. இங்குள்ள கலையரங்கில் அரசு, தனியார் நிகழ்ச்சிகள், மகளிர் குழு பொருட்களின் கண்காட்சி போன்றவை நடந்தன.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க, 80 கோடி ரூபாயை ஒதுக்கியது. இந்த நிதியில், பொதுப்பணித்துறைசீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. கலையரங்கம், குறள்மணி மாட கூரை, தரைகள், வளாக சுற்றுச்சுவர் புனரமைக்கப்பட்டு உள்ளது.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'லிப்ட்' வசதி உள்ளது.வாகன நிறுத்தம், உணவு கூடம், விற்பனை மையம், செயற்கை நீரூற்று, ஒலி, ஒளி காட்சி கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளது. கூட்ட அரங்கம் மற்றும் குறள்மணி மாடத்தில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. தடையில்லாத மின்வினியோகத்திற்கு தேவையான ஜெனரேட்டர் வசதிசெய்யப்பட்டுள்ளது.பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, புல்வெளி அமைத்தல்உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.இதனால், சீரழிந்து கிடந்த வள்ளுவர் கோட்டம் புதுப்பொலி பெற்று திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது. இறுதிகட்ட பணிகளை, பொதுப்பணி துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் மணிவண்ணன், சென்னை மண்டல தலைமை பொறியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், மார்ச் மாதம் திறந்து வைப்பார் என, அமைச்சர் வேலு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி