உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நகர்ப்புற திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

நகர்ப்புற திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

செங்கல்பட்டு:கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், காய்கறி அங்காடி, மீன்மார்கெட் உட்பட பல்வேறு பணிகள் செயல்படுத்த, 11 கோடிய 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகளில், காய்கறி அங்காடி, குளம் துார் வரி சீரமைப்பு, பேருந்து நிலைய பணி உள்ளிட்ட பல்ம்வேறு பணிகள் செயல்படுத்த அரசுக்கு நகராட்சி நிர்வாகள் கருத்துரு அனுப்பியது. அதன்பின், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024- 25 ம் ஆண்டில், செங்கல்பட்டு நகராட்சியில், காய்கறி அங்காடி கட்ட, 2.85 கோடி ரூபாயும், வணிவக வளாகம் கட்ட 3.58 கோடி ரூபாய் என, 6.42 கோடி ரூபாய். மதுராந்தகம் நகராட்சிக்கு, பேருந்து நிலையம் மற்றும் வணிகவாளகம் கட்ட 1.25 கோடி ரூபாய். நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சியில், மீன்மார்க்கெட் கட்ட 2.17 கோடி ரூபாயும், குளம் துார்வாரி சீரமைக்க, 1.36 கோடி ரூபாய் என, மொத்தம் 11.21 கோடியே 38 லட்சம் ரூபாய் நிதி, கடந்த ஆண்டு, ஒதுக்கீடு செய்தது. இப்பணிகளுக்கு, அந்தந்த நகராட்சிகளில் டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததார்ரகள் எடுத்துள்ளனர்தற்போது, பணிகள் துங்கி மந்தமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மூன்று நகராட்சிகளிலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த ஆய்வு கூட்டத்தில், உத்தரவிட்டார். இப்பணிகள் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என, நகராட்சி ஆணையர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை