உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்காததால் ஓதியூரில் அவதி

விபத்தில் சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்காததால் ஓதியூரில் அவதி

செய்யூர்:ஓதியூரில், லாரி மோதி சேதமடைந்த மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், மின்சாரமின்றி கிராமத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைத்து, மின் வினியோகம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 25ம் தேதி, இச்சாலையில் சென்ற லாரி, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதால், மின்கம்பிகள் அறுந்து கிழக்கு கடற்கரை சாலை நடுவே விழுந்தன. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, சாலையிலிருந்து மின் கம்பிகளை அகற்றினர். ஆனால், தற்போது வரை மின்கம்பிகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால், 10 நாட்களாக ஓதியூர் கிராமத்தில், பல குடும்பத்தினர் மின்சாரமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மின் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ