உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

 விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ம துராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கம் பகுதியில், நியாய விலைக் கடை அருகே, 40 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது, இந்த நீர்த்தேக்க தொட்டியின் துாண்களில் ஆங்காங்கே கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன. இதனால், நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தியும், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டித்தர கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - அரவிந்த், மதுராந்தகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை