உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஊராட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் ஊராட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

பவுஞ்சூர்:பவுஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், செய்யூர் வி.சி., எம்.எல்.ஏ., பாபு தலைமையில், ஆய்வுக்கூட்டம் நடந்தது.இதில் வருவாய் துறை, வேளாண்துறை, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில்,'பெஞ்சல்' புயல் காரணமாக கூவத்துார், கானத்துார், செய்யூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சேதமடைந்துள்ள மின்கம்பங்கள் தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக, ஊராட்சி மன்ற தலைவர்கள் குற்றம்சாட்டினர்.இதையடுத்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.பின், சாலை சீரமைப்பு, குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது குறித்து, மக்கள் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ