உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையோரம் அபாய பள்ளம் பெருங்கரணை அருகே பீதி

சாலையோரம் அபாய பள்ளம் பெருங்கரணை அருகே பீதி

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தில் இருந்து, பெருக்கரணை செல்லும் தார்ச்சாலை உள்ளது.இதை முகுந்தகிரி, பேரம்பாக்கம், பெருக்கரணை, புத்துார், கயப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த 2023ம் ஆண்டு பெய்த பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ஏரிக்கரை அருகே சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் உண்டானது.தற்போது வரை அந்த பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளதால், கடந்த சில நாட்களுக்கு முன்,'பெஞ்சல்' புயலால் பெய்த மழையின் போது, பள்ளம் மேலும் பெரிதாகி உள்ளது.இந்த பள்ளம் சீரமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன் சாலையோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை