மேலும் செய்திகள்
மாடு கட்டும் இடமாக மாறிய பயணியர் நிழற்குடை
29-Sep-2025
சித்தாமூர்: பள்ளம்பாக்கம் கிராமத்தில், சேதமடைந்துள்ள பேருந்து நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சித்தாமூர் அருகே கொளத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளம்பாக்கம் கிராமத்தில், வெண்ணாங்குப்பட்டு - மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதி மக்கள் சூணாம்பேடு, சித்தாமூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம், திண்டிவனம், கடப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை, பராமரிப்பு இல்லாமல் கடுமையாக சேதமடைந்து உள்ளது. சுவர் மற்றும் கூரை இடிந்துள்ளன. இதனால், பயணியர் நிழற்குடையில் நிற்காமல், வெளியே சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளம்பாக்கம் கிராமத்தில் உள்ள சேதமடைந்த நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
29-Sep-2025