உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மது அருந்தும் இடமான நிழற்குடை அனந்தமங்கலத்தில் பயணியர் அவதி

மது அருந்தும் இடமான நிழற்குடை அனந்தமங்கலத்தில் பயணியர் அவதி

அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலத்தில், கோவில் அருகே உள்ள பேருந்து பயணியர் நிழற்குடையை, மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்துவதால், பயணியர் அவதிப் படுகின்றனர்.அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, அனந்தமங்கலம் ஊராட்சி உள்ளது.அதில், ஒரத்தியிலிருந்து அனந்தமங்கலம் வழியாக திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இங்கு, அனந்தமங்கலம் அனுமன் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.தற்போது, இந்த நிழற்குடையில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளது. அதில், அப்பகுதி மது பிரியர்கள், பயணியர் நிழற்குடையை மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், மது அருந்த கொண்டு வரும் உணவு மற்றும் இறைச்சி உள்ளிட்டவற்றை அங்கேயே வீசிவிட்டுச் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், கோவில் அருகே உள்ள நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி, 50 அடி துாரம் தள்ளி, புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி