நிழற்குடையில் இருக்கை சேதம் எடையாளத்தில் பயணியர் அவதி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த எடையாளத்தில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடையின் இருக்கைகள் சேதமடைந்தும், தரைப் பகுதிகள் விரிசல் ஏற்பட்டும் உள்ளதால், பயணியர் சிரமப்படுகின்றனர்.அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடு வழியாக ஒரத்தி, வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.இந்த சாலையோரம் உள்ள எடையாளம், சிறுபேர்பாண்டி கிராம மக்கள் பயன்பெறும் வகையில், 2018--19ல், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.தற்போது, பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் முழுதும் சேதமடைந்து, கம்பிகள் மட்டும் உள்ளன.தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு உள்ளது.எனவே, சேதமடைந்த இருக்கைகளை அப்புறப்படுத்தி, புதிதாக இருக்கைகள் அமைத்து, நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.