உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுற்றுச்சுவரில்லாத செங்கை அரசு மருத்துவமனை சமூக விரோத கும்பலால் நோயாளிகள் அச்சம்

சுற்றுச்சுவரில்லாத செங்கை அரசு மருத்துவமனை சமூக விரோத கும்பலால் நோயாளிகள் அச்சம்

செங்கல்பட்டு:நோயாளிகளின் பாதுகாப்பு கருதி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவு, தாய்-சேய் நலப்பிரிவு, குழந்தைகள் வார்டு, எலும்பு முறிவு பிரிவு, இதய சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.மருத்துவமனை வளாகத்தில் உள்ள விலை உயர்ந்த கருவிகள், மருந்து கிடங்கு மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பாதுககாப்பு கருதி, பல ஆண்டுகளுக்கு முன், மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிகிச்சை பெற வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கன மழையில், மருத்துவமனை வளாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. தற்போது இதன் வழியாக மாடு, நாய், பன்றி பன்றிகள் உலா வருகின்றன.இதுமட்டுமின்றி, வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், வார்டுகள் பகுதியிலுள்ள இரும்பு குழாய்களை, மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இரவு நேரங்களில், பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகள் பகுதியில், நோயாளிகளின் உதவியாளராக பெண்கள் தங்குகின்றனர்.இவர்கள், பல்வேறு தேவைக்காக வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது. அப்போது, தனியாக செல்லும் பெண்களை, சமூக விரோத கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, மருத்துவமனை வளாகம் முழுவம் சுற்றுச்சுவர் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க, 4.5 கோடி ரூபாய் நிதி கேட்டு, மருத்துவமனை நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன், சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் துவக்கப்படும்.- பொதுப்பணித்துறை அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை