மேலும் செய்திகள்
ஊரப்பாக்கம் ஊராட்சி தரம் உயர்த்த கோரிக்கை
10-Mar-2025
ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், கடந்த இரு ஆண்டுகளாக கொசு மருந்து அடிக்கவில்லை. இதனால், நாளுக்கு நாள் சுகாதார பாதிப்பு, நோய்த் தொற்று மிகுதியாகி வருவதாக, பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, 692.92 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்கு 15 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.கடந்த 30 மாதங்களாக, துப்புரவு பணிகள் முறையாக நடக்கவில்லை. தெருக்கள் தோறும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் கொசு உற்பத்தி மிகுதியாகி, பகுதிவாசிகள் கடும் இம்சைக்கு ஆளாகி வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பகுதிவாசிகள் கூறியதாவது:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், அதிக வரி வருவாய் உள்ள ஊராட்சியாக ஊரப்பாக்கம் உள்ளது. ஆனால், ஊராட்சி நிர்வாக முறைகேடுகளால், எவ்வித வளர்ச்சிப் பணியும் நடக்கவில்லை.குப்பை மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சுணக்கம் நிலவுகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில், குப்பை அப்புறப்படுத்தாமல், அப்படியே உள்ளது.தேங்கியுள்ள குப்பையால், கொசு உற்பத்தி நாளுக்கு நாள் மிகுதியாகி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் இருந்தும், கடந்த இரு ஆண்டாக அந்தப் பணி நடக்கவில்லை. எனவே, மக்களின் ஆரோக்கியம் காக்க, மாதம் இருமுறையேனும் கொசு மருந்து அடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
10-Mar-2025