உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பல்லாவரத்தில் காவலாளி கொலை சிக்கிய ரவுடிவுக்கு மக்கள் தர்ம அடி

பல்லாவரத்தில் காவலாளி கொலை சிக்கிய ரவுடிவுக்கு மக்கள் தர்ம அடி

பல்லாவரம்:பல்லாவரம் அருகே மைதானத் தில் கால்பந்து விளையாட்டை பார்த்து கொண்டிருந்த காவலாளியை குத்தி கொலை செய்த ரவுடியை, அப்பகுதி மக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பல்லாவரம் அருகே பம்மல், பசும்பொன் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 43. தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை, அதே பகுதியில் உள்ள மைதானத்தில் இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதை, ரஞ்சித்குமார் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு சென்ற, அதே பகுதியை சேர்ந்த ரவுடி அஜித் என்கிற ஜோஸ்வா, 18, என்பவர், கத்தியால் ரஞ்சித்குமார் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இந்நிலையில், ரஞ்சித்குமாரை குத்திய ரவுடி ஜோஸ்வாவை, அப்பகுதியில் இருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஜோஸ்வா, சென்னை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சங்கர் நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜோஸ்வா மீது அடிதடி, திருட்டு உள்ளிட்ட, 6க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரஞ்சித், ஜோஸ்வா இருவரும் உறவினர்கள் என்பதும் தெரிய வந்தது. முன்விரோதத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்தில், சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை