உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

பவுஞ்சூர்:பவுஞ்சூர் பஜார் வீதியிலுள்ள பி.டி.ஓ., அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக, மாற்றுத்திறனாளிகள் நேற்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, ஆந்திர மாநிலத்தில் வழங்குவது போல, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 6,000 ரூபாய், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10,000 மற்றும் படுக்கையில் வாழ்ந்து வரும் நபருக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித்தொகைக்கு நீண்ட நாட்களாக விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே வழங்க வேண்டும் என, கோஷங்கள் எழுப்பினர்.பின், மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை, அணைக்கட்டு போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் விடுவித்தனர்.இதே போல், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரே பழைய ஜி.எஸ்.டி., சாலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை