உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்கள் குறைதீர் கூட்டம் 329 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 329 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இதில் சாலை வசதி, குடிநீர், மின்சாரம்.போக்குவரத்து வசதி முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 329 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.அதை தொடர்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சிறு மற்றும் குறுந்தொழில் புரியும் எட்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு 1.81 லட்ச ரூபாய் மதிப்பில் வங்கிக் கடனுக்கான மானியத்தொகை, ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, ஒருவருக்கு 7,500 மதிப்பில் சக்கர நாற்காலி ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.மேலும், ஊழல் மற்றும் தடுப்பு கண்காணிப்பு வாரத்தினை முன்னிட்டு, ஊழல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் முன்னிலையில், துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.இந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை