| ADDED : மார் 21, 2024 12:01 AM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் வட்டார ஊராட்சிப் பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகளை பொருட்படுத்தாமல், அரசியல் கட்சிகளின் கொடிகள், சுவர் விளம்பரங்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.லோக்சபா தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு, தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி நடக்கிறது. இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள், தற்போது நடைமுறையில் உள்ளது.அதன்படி, உள்ளாட்சி, வருவாய்த் துறை ஆகிய நிர்வாகத்தினர், அரசியல் கட்சிகளின் கொடிகள், பதாகைகள் மற்றும் சுவரொட்டி ஆகியவற்றை அகற்ற வேண்டும். சுவர் விளம்பரங்களை அழிக்க வேண்டும்.அரசுத் துறையினரோ, பெயரளவிற்கு மட்டும் சில இடங்களில் அகற்றினர். ஆனால், பெரும்பாலான இடங்களில் அகற்றப்படாமலேயே உள்ளன. அந்தந்த அரசியல் கட்சியினரிடம், அவர்களையே அகற்றுமாறு அலுவலர்கள் தெரிவித்தும் தேர்தல் ஆணைய உத்தரவை புறக்கணித்துள்ளனர்.திருக்கழுக்குன்றம் வட்டார ஊராட்சிப் பகுதிகளில், அரசியல் கட்சிகளின் கொடிகள், பதாகைகள், சுவர் விளம்பரங்கள் தொடர்ந்து நீடித்திருப்பது, தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.