கள் இறக்க அனுமதி கோரி மனு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பனை மரங்களில் இருந்த கள் இறக்க அனுமதி கோரி பனை விவசாயிகள், கலெக்டர் அருண்ராஜிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகாவில், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் கிராமங்களில், பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்., முதல் ஜூலை மாதம் வரை பனைத் தொழிலாளர்கள் கள் மற்றும் பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். கள் மற்றும் பதநீர் விற்பதால் கிடைக்கும் வருமானம், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.எனவே, கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.