உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி கோரி கலெக்டரிடம் மனு

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி கோரி கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க கோரி, கலெக்டரிடம் நேற்று, பச்சம்பாக்கம் கிராமத்தினர் மனு அளித்தனர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் மாலதி ெஹலன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன், கலால் உதவி கமிஷனர் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, வீடு கட்ட வங்கி கடன், மகளிர் உரிமைத்தொகை, மின் இணைப்பு, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 413 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். அதன் பின், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் தாலுகாவில் உள்ள 88 இருளர் இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ், 26 பேருக்கு பழங்குடியின நலவாரிய அடையாள அட்டை ஆகியவற்றை, கலெக்டர் வழங்கினார். இப்பணியில் சிறப்பாக செயல்பட்ட சப் - கலெக்டர் மாலதி ெஹலன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். அப்போது, பச்சம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க கோரி, கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில், செய்யூர் அடுத்த பச்சம்பாக்கம் கிராமத்தில், கடந்த சில மாதங்களாக, கிராமவாசிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், பணிகள் வழங்கப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம், வேலை வழங்க கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமவாசிகள் நலன் கருதி, தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் சினேகா,''பச்சம்பாக்கம் கிராமத்தினருக்கு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை