உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டரிடம் மனு

திருப்போரூர், செப். 18--திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் வட்டத்தில் அடங்கியது, புதுப்பாக்கம் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அனாதீனம் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், செங்கல்பட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புதுப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண் 64/11ல், 28 சென்ட் புஞ்சை அனாதீனம் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, மனை பிரிவாக மாற்றி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் எதிர்கால தேவை பயன்பாட்டிற்கும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை