உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மதுராந்தகம் பகுதியில் நடவு பணி தீவிரம்

 மதுராந்தகம் பகுதியில் நடவு பணி தீவிரம்

மதுராந்தகம்: மதுராந்தகம் தாலுகாவில் சம்பா பருவ நெல் நடவு பணி தீவிரமடைந்துள்ளது. மதுராந்தகம் தாலுகாவில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. படாளம், எல்.என்.புரம், பூதுார், ஈசூர், தச்சூர், வீராணக்குன்னம், சகாய நகர், அச்சிறுபாக்கம், செம்பூண்டி, எலப்பாக்கம், ராமாபுரம், ஒரத்தி உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. இந்தாண்டு, வடகிழக்கு பருவ மழை பெய்ததில், மதுராந்தகம் தாலுகாவில் 200க்கும் மேற்பட்ட ஏரிகளில், 40 சதவீத ஏரிகளே முழுதுமாக நிரம்பின. இருப்பினும், ஏரி பாசனம், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பாசனம் வாயிலாக, நெல் நாற்று விடும், முதற்கட்ட பணிகளை நவம்பர் மூன்றாவது வாரத்தில் துவக்கினர். தற்போது, நாற்றுகள் வளர்ந்து, நடவு மேற்கொள்ளும் வகையில் வளர்ந்து உள்ளதால், ஆங்காங்கே விவசாயிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ