உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடவுப்பாதையில் சாலை சேதம் சீரமைக்க பா.ம.க., ஆர்ப்பாட்டம்

கடவுப்பாதையில் சாலை சேதம் சீரமைக்க பா.ம.க., ஆர்ப்பாட்டம்

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, காட்டாங்கொளத்துார் - காவனுார் சாலை இடையே ரயில்வே கடவுப்பாதை உள்ளது. இந்த சாலையை கடந்து கொருக்கந்தாங்கல், காவனுார், வடமேல் பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் ரயில்வே கடவுப்பாதை உள்ள 50 மீட்டர் சாலையில் ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் தண்டவாளங்கள் உள்ள பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் தடுமாறி வந்தனர். பள்ளிக் குழந்தைகள் அழைத்துச் செல்லும் பெற்றோர் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பா.ம.க., சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி