உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் பா.ம.க., இளைஞர் சங்க கூட்டம்

மதுராந்தகத்தில் பா.ம.க., இளைஞர் சங்க கூட்டம்

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், பா.ம.க., இளைஞர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. செங்கல்பட்டு தெற்கு பா.ம.க., இளைஞர் சங்க மாவட்ட செயலர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் கணபதி முன்னிலை வகித்தார். மாநில இளைஞர் சங்க தலைவர் கணேஷ் குமார் சிறப்புரையாற்றினார். இதில், வரும் டிச., 17ல், பா.ம.க., சார்பில் நடத்தப்படும் சிறை நிரப்பும் போராட்டம், 10.5 சதவீத இடஒதுக்கீடு போராட்டம், 2026 சட்டசபை தேர்தல் களப்பணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளைக் கழக உறுப்பினர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதுராந்தகம் நகர செயலர் சபரி நன்றியுரை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை