உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமியை ஏமாற்றி தாலி கட்டிய கொலை குற்றவாளிக்கு போக்சோ

சிறுமியை ஏமாற்றி தாலி கட்டிய கொலை குற்றவாளிக்கு போக்சோ

கூடுவாஞ்சேரி:சிறுமியை ஏமாற்றி தாலி கட்டிய, கொலை வழக்கு குற்றவாளியை போலீசார் கைது செய்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.தாம்பரம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த, கூலி வேலை செய்யும் தம்பதியின், 14 வயது மகள், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார்.இந்நிலையில், பழைய நல்லுார், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த நவமணி, 31, என்பவர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, கடந்த 11ம் தேதி, புதுநல்லுார் கன்னியம்மன் கோவிலில், சிறுமிக்கு திருட்டுத்தனமாக தாலி கட்டி, சில நாட்கள் குடும்பம் நடத்தி உள்ளார்.இது குறித்து சிறுமியின் தாய், சோமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் நேற்று முன்தினம் நவமணியை கைது செய்து, கூடுவாஞ்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில், நவமணி மீது இரண்டு கொலை வழக்கு உட்பட, ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது.இதையடுத்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ் நவமணியை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

திருப்போரூர்

செங்கல்பட்டு காவல் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. இவர், அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 14ம் தேதி, மாணவி சாலையில் நடந்து சென்ற போது, எதிரே பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, உடனே அங்கிருந்து பைக்கில் தப்பினார். மாணவி நடந்ததை, தன் பெற்றோரிடம் கூறியதும், திருப்போரூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து, மர்ம நபர் குறித்து விசாரித்தனர்.இதில் அவர், திருப்போரூர் அருகே முள்ளிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், 35, என தெரிந்தது. இதையடுத்து கார்த்திகேயனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை