உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமியை திருமணம் செய்தவருக்கு போக்சோ

சிறுமியை திருமணம் செய்தவருக்கு போக்சோ

செய்யூர்:செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 35; கூலித்தொழிலாளி. இவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் பள்ளிக்குச் சென்று வீட்டிற்கு வந்த சிறுமி, மாலை 5:00 மணியளவில் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். மகளை காணாத பெற்றோர், இதுகுறித்து சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்ததில், சிறுமியை திருமணம் செய்து மேல்மருவத்துார் பகுதியில் சதீஷ் தங்கியிருந்தது தெரிந்தது. இருவரையும் அங்கிருந்து அழைத்து வந்து விசாரித்த போலீசார், சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர். சதீஷ் மீது 'போக்சோ' வழக்கு பதிந்து, கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ