உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்

புதிதாக கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்

பவுஞ்சூர்,பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.நெல், மணிலா, தர்பூசணி உள்ளிட்ட பயிர்கள், பருவத்திற்கு ஏற்றது போல விவசாயம் செய்யப்படுகின்றன. தற்போது, சம்பா பருவத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தற்போது, புதிய கல் குவாரி துவங்குவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.கல்குவாரி அமைந்தால், நிலத்தடி நீர் நாசமாகி விவசாயம் மற்றும் கால்நடைகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது.இதனால், கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஜன., 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தற்போது, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல் குவாரி அமைந்தால், ஆண்டுதோறும் கனிம வள நிதியின் கீழ், 1 கோடி ரூபாய் அளவில் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடக்கும் என, தனிநபர்கள் சிலர் கல் குவாரிக்கு ஆதரவாக, பொதுமக்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இயற்கை சூழல் மற்றும் கனிம வளத்தை பாதுகாக்க, கல் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என, பவுஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில், பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில்,'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி