உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடக்கு செய்யூரில் சாலை நடுவில் பள்ளம்

வடக்கு செய்யூரில் சாலை நடுவில் பள்ளம்

செய்யூர், வடக்கு செய்யூரில் செய்யூர்- பவுஞ்சூர் மாநில நெடுஞ்சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. செய்யூர் அடுத்த வடக்கு செய்யூர் பகுதியில் செய்யூர்- பவுஞ்சூர் மாநில நெடுஞ்சாலை உள்ளது. அம்மனுார், செங்காட்டூர், வீரபோகம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இருசக்கர வாகனம், கார், பேருந்து என ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் சாலையின் நடுவே சில தினங்களுக்கு முன் திடீரென பள்ளம் ஏற்பட்டு சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ