உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர், ஆலத்துார் பகுதியில் நாளை 30 இடங்களில் மின் தடை

திருப்போரூர், ஆலத்துார் பகுதியில் நாளை 30 இடங்களில் மின் தடை

திருப்போரூர்:திருப்போரூர், ஆலத்துார் பகுதிகளில் நாளை, 30 இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து மறைமலை நகர் மின்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மறைமலை நகர் மின் கோட்டம், திருப்போரூர் உப கோட்டத்தில் உள்ள திருப்போரூர் மற்றும் ஆலத்துார் ஆகிய இடங்களில் உள்ள 110/33-11 கே.வி., துணைமின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளன.இதனால் திருப்போரூர், தண்டலம், செங்காடு, இள்ளலுார், செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, சென்னேரி, மயிலை, திருவடிசூலம், மடையத்துார், அனுமந்தபுரம் ஆகிய பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.இதுதவிர காலவாக்கம், ஆலத்துார் சிட்கோ, கருங்குழிப்பள்ளம், பண்டிதமேடு, பையனுார், கூத்தவாக்கம் சாவடி, பூஞ்சேரி, கடம்பாடி, வடகடம்பாடி ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.ஆலத்துார், தேவனேரி, பட்டிபுலம், இளந்தோப்பு, சாலவான் குப்பம், கேளம்பாக்கம் ஒரு பகுதி, தையூர் ஒரு பகுதி, மாமல்லபுரம் ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறைமலை நகர்

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மறைமலை நகர் என்.ஹெச் 1, 2, சாமியார் கேட் முதல் பேரமனுார் கேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை