உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

திருப்போரூர், திருப்போரூர் பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த மலைக்கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நேற்று, தை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. கோவிலுக்கு காலையிலிருந்து பக்தர்கள் வரத் துவங்கினர். மாலை 5:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.உற்சவர், கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை