மேலும் செய்திகள்
மதுராந்தகத்தில் ஸ்கூட்டர் திருட்டு
07-Dec-2024
மதுராந்தகத்தில் ஸ்கூட்டர் திருட்டு
07-Dec-2024
மதுராந்தகம்:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் பகுதியில் இயங்கி வரும் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்குச் சொந்தமான பேருந்து நேற்று, மதுராந்தகத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் சென்றது.மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே, திடீரென பேருந்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதை கவனித்த ஓட்டுனர், பேருந்தை உடனே நிறுத்தி மாணவ, மாணவியரை பத்திரமாக இறக்கி விட்டனர்.இதுகுறித்த தகவலின்படி வந்த மதுராந்தகம் தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.பேருந்தில் இருந்து புகை அதிகமாக வந்ததால், அப்பகுதியே புகை மண்டலமாக மாறி, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மதுராந்தகம் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
07-Dec-2024
07-Dec-2024